(Wheezing)மூச்சுத்திணறல்

மரபணுகாரணங்கள், வேகமான நகரமயமாக்கல், மாசடைந்த காற்று மற்றும் அதில் உள்ள நச்சுகள் , வாகனங்களின் புகை என்று வெவ்வேறு காரணங்களால் மூச்சிரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகமாகிறது.     

இந்நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள்

  • இரவில் மற்றும் அதிகாலையில் இருமல் , நெஞ்சு இறுக்கம்
  • உடற்பயிற்சியின் போது  இருமலும், மூச்சிரைப்பும்,சோர்வு
  • இலகுவான வேலைகளின் போதுகூட களைப்பு, மூச்சிரைப்பு
  • முறையற்ற தூக்கம்,
  • ஒவ்வாமைக்கான (allergy) அறிகுறிகள் -மூக்கு ஒழுகுதல், கண்களின் அடிப்பகுதியில் கருவளையம்,
  • தோலரிப்பு  

இவற்றைக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சுவாசக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு நோய்  மிகவும் தீவிரமாகும். சரிவர சிகிச்சை எடுக்காத குழந்தைகள் சில நேரங்களில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்

நோய்க்கான சிகிச்சை

இந்நோய்காண காரணங்களை  தவிர்ப்பது மிகவும் முக்கியம். நோய்க்கு நிவாரணி மருந்துகள், தடுப்பு மருந்துகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. நோயின் தீவிரத்தை பொறுத்து உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

Loading